• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் இராணுவத்திற்கு ஏமாற்றம்!

ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியன்மார் இராணுவத்திற்கு ஏமாற்றம்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/02/06
in உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

இராணுவ ஆட்சி இடம்பெற்று வரும் மியன்மாரில்,  சிறை வைக்கப்பட்டுள்ள  முன்னாள் அரச தலைவரான ஆங் சான் சூகியின் வீட்டை, அந்த நாட்டு அரசாங்கம் ஏலத்தில் விட்டுள்ள நிலையில் அதனை வாங்க யாரும் முன்வரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அவருக்கு  அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டிருந்தது. இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு 2015-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார்.

அத்துடன்  2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார். இருப்பினும்  2021-ம் ஆண்டு அந்த நாட்டை மீண்டும் இராணுவம் ஆட்சிக்குள் கொண்வரப்பட்டது. இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும்  விதிக்கப்பட்டது.

இந்நிலையில்  சிறையில் உள்ள ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரி அங்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது அந்த நாட்டின் இராணுவம் கோர முகத்தை காட்டி அடக்கி வருகிறது. மியன்மாரில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வரும்நிலையில் ஆங் சான் சூகிக்கு சொந்தமான சொத்துகளை இராணுவம் விற்று பொருளாதார இழப்பை சரிகட்டி வருகிறது.

இராணுவ நெருக்கடி நிலையின்போது ஆங் சான் சூகி அடைக்கப்பட்டிருந்த வீடு கையகப்படுத்தப்பட்டது. மேலும் அதனை ஏலம் விட இராணுவம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஏலம் விடப்பட்ட அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை.

வரலாற்று சிறப்பு வாய்ந்த நினைவு சின்னமாக கருதப்படும் அந்த குட்டி பங்களா, யங்கூனில் உள்ள இனியே ஏரிக்கரையில் கட்டப்பட்டது. சூகியின் தந்தையும், அந்த நாட்டின் விடுதலை போராட்ட வீரரான இராணுவ தளபதி ஆங் சாங்கும் வசித்து வந்த பூர்வீக வீடாக அது உள்ளது. அந்த வீடுதான் ஆங் சான் சூகி 15 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டு அறவழியில் போராட வழிவகுத்தது. மேலும் நோபல் பரிசையும் பெற்று தந்தது.

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், ஐ.நா சபை முன்னாள் பொதுச்செயலாளர் பான்-கி-மூன் முதலியவர்கள் அந்த வீட்டில் வைத்துதான் ஆங் சான் சூகியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட மூன்றாவது முறையாக இராணுவ அரசு முயற்சித்த போதும்  மியன்மார் இராணுவத்தினரின் ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Aung San Suu Kyiஆங் சான் சூகிமியன்மார்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பல நாள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள விடாமுயற்சி

Next Post

டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

Related Posts

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !
இந்தியா

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
இலங்கை

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!
இலங்கை

புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

2026-06-16
ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!
இலங்கை

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

2026-06-16
Next Post
டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவை தொடர்ந்து ஐ.நாவில் இருந்து விலகும் இஸ்ரேல்

அமெரிக்காவை தொடர்ந்து ஐ.நாவில் இருந்து விலகும் இஸ்ரேல்

கனடா – அமெரிக்க உச்சிமாநாட்டை வெள்ளியன்று நடத்தும் ட்ரூடோ!

கனடா - அமெரிக்க உச்சிமாநாட்டை வெள்ளியன்று நடத்தும் ட்ரூடோ!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

0
கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

0
யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.