எல்பிட்டிய பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினரால் கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுரவெல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஹெரோயின் ஆகியவற்றை வைத்திருந்த 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று மாலை இந்தச் சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச் சோதனையின் போது, 5.34 கிராம் ஹெரோயின், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 எம்எம் பிஸ்டல், ஒன்பது 9 எம்எம் துப்பாக்கி ரவைகள் மற்றும் ஒரு மகசீன் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொஸ்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் 2025 ஜனவரி 30 ஆம் திகதி அதிகாலை கொஸ்கொட பொலிஸ் பிரிவில் நபர் ஒருவர் மீது சுட்டுக்கொல்லப்பட்ட கொலை முயற்சி வழக்கின் முதன்மை சந்தேக நபர் என்பது மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.