• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பிரதான செய்திகள்
வயதை விட  முடி அதிகமாக போகிறதா? – உங்களுக்கான தீர்வு

வயதை விட முடி அதிகமாக போகிறதா? – உங்களுக்கான தீர்வு

Kavipriya S by Kavipriya S
2025/02/06
in பிரதான செய்திகள், லைப் ஸ்டைல்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தலைமுடி உதிர்தல், முடி கொட்டுதல் பிரச்சினை உலகம் முழுவதுக்கும் உள்ள பிரச்சினையாகும். பொதுவாக, எல்லோருக்குமே தினமும் கொஞ்சம் முடிகள் தலையிலிருந்து கொட்டத்தான் செய்யும். இதை நாம் கவனிக்க மாட்டோம். கண்டுகொள்ளவும் மாட்டோம். சிலருக்கு தலை வாரும்போதெல்லாம் நிறைய முடி கொட்டும். இதனால் ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த முடியையும் இழக்க நேரிடுமோ என்ற கவலை உருவாகும்.

குறைவாக முடி கொட்டும்போது, கொட்டும் முடியைவிட சற்று அதிகமாகவே புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும். அதனால் வெளியில் தெரியாது. ஆனால், முடி கொட்டிய இடத்தில் புது முடிகள் முளைக்காதபோதுதான் தலைமுடி இழப்பு, தலையில் முடி கொட்டுதல் போன்றவை தெரிய ஆரம்பிக்கும்.
முடி இழப்பு மற்றும் முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

1). மரபுவழி அதாவது பரம்பரைக் காரணங்கள் மிக முக்கியமானதாகும். வயது கூடிக்கொண்டே வரும்போது ஆண்களுக்கு தலையின் முன்பக்கத்திலிருந்து பின்பக்கத்தை நோக்கி தலைமுடி கொட்டிக் கொண்டே போவது, பெண்களுக்கு தலை உச்சியில் முடி கொட்ட ஆரம்பிப்பது, இந்த அமைப்பில்தான் ஆண், பெண் இருவருக்கும் பரம்பரையாக முடி கொட்டும்.

2). பெண்களைப் பொறுத்தவரை கர்ப்பகாலம், பிரசவகாலம், மாதவிடாய் நிரந்தமாக நிற்கின்ற காலம், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இவர்களுக்கெல்லாம் தலைமுடி தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ கொட்டலாம்.

3). தலையில் ஏற்படும் தோல் நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் சமயம், இன்னும் சில காரணங்களினாலும் தலைமுடி கொட்டலாம்.

4). புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கு தலைமுடி முழுவதும் கொட்டிவிடும். நோய் முழுவதும் குணமானபின் மறுபடியும் தலை முழுவதும் முடி வளர்ந்துவிடுவதுண்டு.

5). உடலாலும், மனதாலும் ஏற்படும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவத்திற்குப் பின்னர், தலைமுடி கொட்டுவதுண்டு. பிரச்சினை சரியான பின் முடி மீண்டும் வளர ஆரம்பித்துவிடும்.

6). அதிக ஹேர் ஸ்டைல் பண்ணுபவர்களுக்கும், தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய், க்ரீம், பேஸ்ட், போன்ற ரசாயனப் பொருட்கள் கலவையை அடிக்கடி, அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் முடி கொட்டும்.

7). அப்பா, அம்மாவுக்கு தலை வழுக்கை, தலைமுடி அதிகமாக கொட்டுதல் இருந்தால், பிள்ளைகளுக்கும் அதே ஸ்டைலில் கொட்டும்.

8). வயது கூடக்கூட முடி கொட்டுவது இயற்கையாகவே நடக்கத்தான் செய்யும்.

9). திடீரென்று உடல் எடை குறைந்தால் தலைமுடி கொட்ட வாய்ப்புண்டு.

10). சர்க்கரை நோய், லூப்பஸ் நோய் உள்ளவர்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டும்.

11). அதிக மன அழுத்தம், தலைமுடியை அதிகமாக பிய்த்துக் கொள்வது, டென்ஷன் போன்றவையும் தலைமுடியைக் கொட்டச் செய்யும்.

12). போதுமான, தேவையான சரிவிகித சத்துணவு உடலுக்குக் கிடைக்காவிட்டாலும் தலைமுடி கொட்டும்.

13). ஹேர் டை, ஹேர் ஷாம்பு, ஹேர் க்ரீம் இன்னும் தலைமுடியைப் பாதுகாக்க என்னென்ன ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிக்கிறீர்களோ, அவை எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.
ஆண்களைப் பொறுத்தவரை தலைமுடி இழப்பால், மிகப் பெரிய பிரச்சினைகள் ஒன்றும் குடும்பத்திலோ, சமுதாயத்திலோ வராது. ஆனால், பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு தலைமுடி இழப்பும் குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி மிகப்பெரிய பிரச்சினைதான்.

தீர்வுகள்
தலைமுடியை மிகவும் லாவகமாகக் கையாள வேண்டும். தலைமுடியிடம் கோபத்தை எப்பொழுதும் காட்டக் கூடாது. பெரிய பல் உள்ள சீப்புகளை உபயோகிக்க வேண்டும். தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு வரும் ரப்பர் , பிளாஸ்டிக் கிளிப்புகைள தவிர்க்க வேண்டும்.

தலைமுடி அதிகமாக கொட்ட ஆரம்பித்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும். தலைமுடி இழப்பை சரிகட்ட என்னென்ன வைட்டமின்கள், சத்துணவுகள், பழங்கள் சாப்பிடலாம் என்பதைக் கேட்டறிந்து அவற்றை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

அதிக சூரிய ஒளி நேரடியாக தலையில் படுமாறு இருப்பதைத் தவிர்க்கவேண்டும். சிகரெட் புகைப்பவர்கள் அந்த பழக்கத்தை நிறுத்துவது பலன் அளிக்கும். புற்றுநோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், டாக்டரிடம் கூலிங் தொப்பி போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டபின் அதை உபயோகிக்கவேண்டும்.
“தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். தலைமுடி காய்ந்து போய் இருக்கக் கூடாது” என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பதுண்டு. இந்த அறிவுரைகளை புறந்தள்ளக்கூடாது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கைதி 2 ஆம் பாகத்தில் இணையும் பிரபல நடிகர்!

Next Post

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சகலதுறை வீரர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஓய்வு!

Related Posts

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!
இலங்கை

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
உறுதிபடுத்தப்பட்ட கூட்டணி; சென்னையில் விஜயை சந்தித்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்
இந்தியா

உறுதிபடுத்தப்பட்ட கூட்டணி; சென்னையில் விஜயை சந்தித்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்

2026-05-06
Next Post
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சகலதுறை வீரர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஓய்வு!

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சகலதுறை வீரர் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஓய்வு!

லண்டன் கிரென்ஃபெல் கோபுரத்தை இடிக்க தீர்மானம்!

லண்டன் கிரென்ஃபெல் கோபுரத்தை இடிக்க தீர்மானம்!

அதிர்ச்சியடைய வைத்துள்ள கறி மிளகாயின் விலை!

அதிர்ச்சியடைய வைத்துள்ள கறி மிளகாயின் விலை!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.