இங்கிலாந்தின் தலைநகரில் அமைந்துள்ள கிரென்ஃபெல் கோபுரம் (Grenfell Tower) இடிக்கப்பட உள்ளது.
மேற்கு லண்டனில் அமைந்துள்ள இந்த கோபுரமானது கடந்த 2017 ஜூன் மாதம் தீ விபத்துக்குள்ளானது.
இந்த பேரழிவுகரமான சம்பவத்தில் குறைந்தது 72 பேர் உயிரிழந்தனர்.
அன்றிலிருந்து கோபுரம் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் இறந்த உறவினர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுடனான சந்திப்பின் போது, கட்டிடத்தின் தலைவிதி குறித்த முறையான அறிவிப்பு வெள்ளிக்கிழமை (07) வெளியிடப்படும் என்று கூறினார்.
வார இறுதிக்குள் இது தொடர்பான மேலதிக விவரங்கள் அமைச்சர்களால் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கோபுரம் நிலையானதாக இருந்தாலும், மக்கள் அருகிலேயே வசிக்கவும், வேலை செய்யவும், படிக்கவும் பாதுகாப்பாக இருக்கும் நிலையில், கோபுரத்தின் நிலை காலப்போக்கில் மோசமடையும் என்றும், அதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான யதார்த்தமான வாய்ப்பு இல்லை என்றும் பொறியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பரில் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அறிவுரையில் கட்டிடத்தின் ஒரு பகுதி கணிசமாக சேதமடைந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.