திசைகாட்டி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர் தற்போது அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த அவர், திசைக்காட்டிக்கு வாக்களித்தவர்களுக்கு சரியான விடயங்களை விளக்கினால் அவர்கள் தங்களுடன் இணைந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் திசைகாட்டிக்கு உதவிய தனது நண்பர்கள் பலர் இன்று திசைகாட்டியில் இல்லை எனவும் அவர்கள் அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், திலித் ஜயவீர நேற்று (08) காலை அனுராதபுரம் புனித தலத்திற்கு சென்றிருந்ததோடு, ருவன்வெளி மகாசேயவில் வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தார். இதன்போது , அங்கு கூடியிருந்த பக்தர்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்ட அவர் அதனைத் தொடர்ந்து ருவன்வெளி மகாசேய மடத்தின் பீடாதிபதி வணக்கத்திற்குரிய ஈத்தலேவடுனுவேவே ஞானதிலக தேரரிடம் ஆசி பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.