மின்தடையால் கிளிநொச்சி வைத்தியசாலையின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள மின் தடை காரணமாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும், மின்பிறப்பாக்கியும் இயங்காத நிலையில் பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நோயாளர் விடுதி உள்ளிட்ட சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், புதிதாகக் கொண்டு வரப்பட்ட மின்பிறப்பாக்கியும் பொருத்தப்படாத நிலையில் வைத்தியசாலையின் பல்வேறு சேவைகள் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.