கதிர்காமம் கடற்படை விடுதியில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அங்கு தங்கியிருந்த இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (11) காலை 8.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 32 வயதுடைய பெண் ஒருவரும் 36 வயதுடைய ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
காலை நேர உணவு தயாரிப்பதற்காக சென்ற போது எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.