உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்.” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தை மாதத்தில் வருகிற பூசத் திருநாள் தைப்பூச விழாவாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநாளில், தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பழனியில் பாதயாத்திரையாக சென்ற ஏராளமான பக்தர்கள் இன்று தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகமானதை அடுத்து, சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பக்தர்களுக்கு தேவையான அன்னதானம், தண்ணீர் வசதி, கழிவறை வசதி, போக்குவரத்து வசதிகளையும் தமிழக அரசு சிறப்பாக செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு பல அரசியல் தலைவர்களும் தங்களது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தியில்,
“தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!” எனப் பதவிட்டுள்ளார்.