அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் (Acharya Satyendra Das), மூளைச்சாவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில் புதன்கிழமை (12) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 85.
லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் கழக (SGPGI) மருத்துவமனையில் சிகிச்சையின் போது அவர் காலமானதாக அவரது சீடர் பிரதீப் தாஸ் உறுதிப்படுத்தினார்.
அவரது இறுதி கிரியைகள் வியாழக்கிழமை (13) அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் நடைபெறும்.
மேலும் அவரது உடல் தற்போது லக்னோவில் இருந்து புனித நகரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் ஞாயிற்றுக்கிழமை மூளைச்சாவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது இரங்கல் செய்தியில், வயதான அர்ச்சகரின் மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார்.