இலங்கை பேஸ்பால் சங்கத்தின் பொதுச் செயலாளர் விங் கமாண்டர் மார்க் பொன்சேகாவுடன் இரண்டு இலங்கை தேசிய பேஸ்பால் (அடிப்பந்தாட்டம்) அணி வீரர்களான சமீர ரத்நாயக்க மற்றும் சந்தீஷா மீகொட ஆகியோர் டுபாயில் நடைபெறும் பேஸ்பால் யுனைடெட் யுஏஇ லீக்கில் பங்கேற்க உள்ளனர்.
போட்டிகள் பெப்ரவரி 14-18 வரை நடைபெறும்.
ரத்நாயக்க மற்றும் மீகொட ஆகியோர் வீரர்களாக போட்டியிடுவார்கள், பொன்சேகா போட்டியின் அதிகாரியாக பணியாற்றுவார்.
இந்த பங்கேற்பு நாட்டில் விளையாட்டு வளர்ச்சிக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக உள்ளதாக இலங்கை பேஸ்பால் சங்கம் கூறியுள்ளது.
போட்டியின் அனுபவம் இலங்கையின் எதிர்கால வெற்றிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.