வாதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரின் உயிரிழப்புக்கு பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதலே காரணம் என உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 10, அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
பிணை வழங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட அவர் சுகயீனமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந் நிலையில் இவரின் உயிரிழப்புக்கு பொலிஸாரின் தாக்குதல் காரணமென அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனிடையே, இது தொடர்பான உள்ளக விசாரணை இடம்பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் சட்ட வைத்திய நிபுணர்கள் மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்வார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.