பாணந்துறை கடலில் நீராடி கொண்டிருந்த 13 பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 12 பேர் மீட்கப்பட்டதாகவும் பாணந்துறை உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஒரு இளைஞன் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை உதவிக்கான அவர்களின் கூக்குரலுக்கு அமைய செயற்பட்ட கடற்படை மற்றும் பொலிஸ் உயிர்காப்பு அதிகாரிகள் 12 பேரை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட அனைவரும் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மீட்புப் பணியில் ஈடுபட்ட உயிர்காப்பாளர்களும் மூழ்கியிருந்த கப்பலில் மோதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.