அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று புதன்கிழமை ஷுப்மன் கில்லின் அதிரடியான சதம் மற்றும் அசத்தலான பந்து வீச்சினால் இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த இந்தியா 356 ஓட்டங்களை குவித்தது.
357 ஓட்டம் என்ற இமாலய இலக்கினை துரத்திய இங்கிலாந்து 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.
இதனால், இந்தியா 142 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிது.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியின் வருந்தத்தக்க சுற்றுப் பயணமாக இது அமைந்தது.
சுற்றுப் பயணத்தில் இந்தியாவுக்கு எதிரான 8 வெள்ளை-பந்து வடிவ போட்டிகளிலும் இங்கிலாந்து 7 ஆட்டங்களில் தோல்வியை தழுவி, ஒன்றில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.
நேற்யை போட்டியில் இளம் இந்திய வீரர் ஷுப்மன் கில் 102 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகள் அடங்கலாக 112 ஓட்டங்களை பெற்றார்.
அவருக்கு அடுத்த படியாக ஸ்ரேயல் அய்யர் 78 ஓட்டங்களையும், விராம் கோலி 52 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணிக்கு வலுச் சேர்த்தனர்.
இந்த வெற்றியுடன் இந்திய அணியானது 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதற்காக நாளை டுபாய் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கு அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்கள்.
தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.