பெப்ரவரி மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 17 லட்சத்து 25 ஆயிரத்து 795 குடும்பங்களுக்கான கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
இதற்கென12.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 8 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கு 34 லட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதுடன், அதில் 18 லட்சம் பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை அஸ்வெசும பயனாளர்களின் குடும்பங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு முன்னிட்டு பாடசாலை கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றுக் கொள்வதற்கு 6000 ரூபா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது