அயர்லாந்தின் குதிரைப் பந்தய விளையாட்டு வீரரான மைக்கேல் ஓ’சுல்லிவன் (Michael O’Sullivan) தனது 24 ஆவது வயதில் உயிரழந்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி துர்ல்ஸில் குதிரை பந்தயத்தின் போது நடந்த விபத்தில் கொர்க் பல்கலைக்கழக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கோமா நிலையில் இருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை (16) அதிகாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் ஐரிஷ் குதிரையேற்றம் ஒழுங்குமுறை வாரியத்தினை (IHRB) பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
IHRB இன் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஜெனிஃபர் புக் ஒரு அறிக்கையில்,
இந்த நம்பமுடியாத கடினமான நேரத்தில் மைக்கேலின் குடும்பத்தினர் உயிரிழந்த வீரரின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்தனர், அவ்வாறு செய்வதன் மூலம் மற்ற நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் – என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மைக்கேலின் வெற்றி மற்றும் அவரது பணிவு பலரை ஊக்கப்படுத்தியிருக்கும், மேலும் அவரை அறிந்த அனைவருடனும் இன்று இழப்பின் உணர்வைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் ஜெனிஃபர் புக் தெரிவித்தார்.