சமூக பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் இந்த வரவு செலவுத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது என்றும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலும், வலுவான சர்வதேச உறவுகளை உருவாக்குவதிலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
இன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
நாம் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைத்து பொருளாதார இறையாண்மைக்கு நெருக்கமாக செல்ல வேண்டும் அத்துடன் எதிர்காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தொடர வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.
நாம் நமது சொந்த பொருளாதார நிகழ்ச்சி நிரலை அமைத்து பொருளாதார இறையாண்மைக்கு நெருக்கமாக செல்ல வேண்டும்.
எதிர்காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தொடர வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்றும் மக்களின் சம்பளம் குறைந்துள்ளதால் நியாயமான சம்பள உயர்வு வழங்க வேண்டும். குடிமக்களைப் பராமரிப்பது மனிதாபிமான அரசாங்கத்தின் பொறுப்பு.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கெதிரான பல்வேறுபட்ட கருத்துகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை அரசாங்கத்தால் ஸ்திரப்படுத்த முடிந்ததுடன், ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிரான ரூபாவை பலப்படுத்தியதுடன், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை 2025ஆம் ஆண்டு 5 சதவீதத்தில் பேணுவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் வாழ்க்கையையும் உயர்த்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதாரத்தின் சக்திவாய்ந்த பகுதி ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்களின் கைகளில் குவிந்துள்ளதுடன் பொருளாதாரத்தில் அதிக ஜனநாயகமயமாக்கல் தேவை. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.