ஊழல் நிறைந்த ஆட்சி, தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொறுப்பற்ற நிர்வாகமே நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்குக் காரணம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
இன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
அந்த காரணங்களாலேயே மக்கள் வரிசையில் நின்று இறக்க நேரிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார் அத்துடன் 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, ஏழை மக்கள் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.
முன்னைய சிதைக்கப்பட்ட ஆட்சி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவில்லை என்றும் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், ஜனநாயகத்தின் இலட்சியமும் உடைந்தது என்றும் தெரிவித்துள்ளார்