2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, 570 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்திய பின்னரும், 2024 இறுதியில் 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அந்நிய கையிருப்பை பராமரிக்க அரசாங்கத்தால் முடிந்தது என்று அவர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தனது ஆரம்ப வரவு செலவுத் திட்ட உரையை ஆற்ற ஆரம்பித்துள்ளார்.
2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம், 2025 ஜனவரி 1 முதல் 31 2025 டிசம்பர் வரையிலான ஆண்டிற்கான அரசாங்கத்தின் உத்தேச செலவினங்களைக் கோடிட்டுக் காட்டுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான அரசின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் ரூ. 4,218 பில்லியன்.