முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் இன்றில் இருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த (14.02.2025) காலை 7 மணிக்கு, ஒரு காலினை இழந்த முன்னாள் போராளி ஒருவர் முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் நீர் மற்றும் உணவு இல்லாமல், நீதிகிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டத்தை 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பித்திருந்தார்
இன்னிலையில் இலங்கை மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆரம்பித்த நிலையில் நான்காவது நாளான இன்று மக்கள், வடகிழக்கு நாடளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.
இதேவேளை உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கான தீர்வு கிடைக்காவிட்டால் மீண்டும் தன்னுடன் இணைந்து பொதுமக்களும் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கடிதம் மூலம் எழுதி தெரிவித்ததனையடுத்தே குறித்த போராட்டம் கைவிடப்பட்டது
பின்னர் குறித்த நபரின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதனால் நோயாளர்காவு வண்டி மூலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது