உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் சிறப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு ஆதரவாக 187 வாக்குகளும் எந்த நாடா ளுமன்ற உறுப்பினரும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கவில்லை.
அதனை தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு எனப்படும் குழு நிலை விவாதம் ஆரம்பமானது.
இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில் எதிராக வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம் திருத்தம் இல்லாமல் சிறப்பு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்குத் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.