மேற்கு-மத்திய ஆல்பர்ட்டாவில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை வளர்ப்பு நாய் கடித்ததில் பிறந்து 14 நாட்களே ஆன ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவன்ஸ்பர்க்கில் இருந்து ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டபோது, ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் என்ட்விசில் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிருக்கு ஆபத்தான கடி காயங்களுக்கு உள்ளான குழந்தை, ஸ்டார் ஏர் அம்பியூலன்ஸ் மூலமாக எட்மண்டனில் அமைந்துள்ள ஸ்டோலரி சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குழந்தையை காப்பாற்றுவதற்கான மருத்துவ நிபுணர்களின் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது பலனிக்காமல் குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை கனேடிய பொலிஸார் திங்கட்கிழமை (17) பிற்பகுதியில் வெளியிட்டனர்.
இந்த சம்பவம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.