அல்-அமேராட்டில் செவ்வாய்கிழமை (18) நடந்த ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண லீக் 2 ஆட்டத்தின் போது அமெரிக்காவும் ஓமனும் ஒரு பந்து கூட வேகத்தில் வீசாமல் சரித்திரம் படைத்தன.
போட்டியில் வீசப்பட்ட அனைத்து ஓவர்களும் (61) சுழற்பந்து வீச்சாளர்களால் வீசப்பட்டன.
இது 4,671 ஆடவர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் வேகப் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்ட முதல் சந்தர்ப்பமாகும்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா 35.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ஓட்டங்களை எடுத்தது.
123 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 25.3 ஓவரில் 65 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இதனால், அமெரிக்கா 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.
அமெரிக்க பந்துவீச்சாளர் நோஸ்துஷ் கென்ஜிகே 11 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
2011 ஆம் ஆண்டு பங்களாதேஷ்-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
ஒரு நாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாக இது இதுந்தது.
இந்த சாதனையும் இந்த ஆட்டத்தில் சமன் செய்யப்பட்டது.
அமெரிக்க வீரர் நோஸ்துஷ் கென்ஜிகே மாத்திரம் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.