ரஷ்யாவுடன் இடம்பெற்று வருகின்ற யுத்ததிற்கு உக்ரேன் ஜனாதிபதியே பிரதான காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன் உக்ரேன், யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேன்- ரஷ்யப் போர் நிறுத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது ” எதிர்வரும் நாட்களில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை சந்திக்கவுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மொஸ்கோவின் படையெடுப்பிற்கு உக்ரேன் ஜனாதிபதியே காரணம் என குற்றம்சாட்டிய அவர் ரஸ்யாவுடனான யுத்த நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரேனுக்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான திறமையும் அதிகாரமும் தன்னிடம் இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த பேச்சுவார்தைகள் சரியான விதத்தில் இடம்பெறுவதாகவும் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை என உக்ரேன் தெரிவிப்பதாகவும் கடந்த மூன்று வருடங்களாக நீங்கள் இதனை ஏன் நிறைவிற்கு கொண்டு வரவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
உக்ரேன் அரசாங்கம் ஒருபோதும் இதனை ஆரம்பித்திருக்க கூடாது என்றும் உக்ரேனுக்காகத் தான் இந்த உடன்பாட்டிற்கு வந்திருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.