இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பராசக்தி’.
இத் திரைப்படம் சிவகார்த்திகேயனின் 25 ஆவது திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இத் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார் எனவும், இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடி சுற்று வட்டாரப் பகுதிகளில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத் திரைப்படத்தில் நடிகர் பாண்டியராஜனின் மகனான பிரித்வி இணைந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் பிரித்வி ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தில் 2 ஆவது கதாநாயகளாக நடித்திருந்தார். அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்திருந்ததைத் தொடர்ந்து அவருக்கு பராசக்தி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் சிவகார்த்திகேயனுடன் அவரும் இணைந்து எடுத்துக் கொண்டு புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.