மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியின் Ellyse Perry
அதிரடியாக ஆடி 43 பந்தில் 2 ஆறு ஓட்டங்கள், 11 நான்கு ஓட்டங்கள் உள்பட 81 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
Richa Ghosh 28 ஓட்டங்களும், ஸ்மிருதி மந்தனா 26 ஒட்டங்களும் எடுத்தனர். மும்பை சார்பில் Amanjot Kaur 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 168 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் Harmanpreet Kaur அரை சதமடித்து ஆட்டமிழந்தார். Nat Sciver-Brunt 21 பந்தில் 42 ஓட்டங்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் Amanjot Kaur போராடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது மும்பை அணி பெற்ற 2வது வெற்றி ஆகும்.