கொட்டாஞ்சேனை துப்பாக்கிதாரிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் செயற்பாடு உடைய கைகுண்டொன்று மீட்பு.
சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் , இதன்போது குறித்த இரண்டு சந்தேகநபர்களும் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை – கொட்டாஞ்சேனை வீதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவரினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விசாரணைகளின் போது பொலிஸாரின் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.