முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர் லீக் T20 கிரிக்கெட் தொடர் போட்டி இன்று இரவு 7.30 க்கு மும்பையில் நடைபெறவிருக்கிறது.
இந்த தொடர் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மார்ச் 16ஆம் திகதி வரை இந்தியாவின் மும்பை, ராய்பூர் மற்றும் லக்னோவில் நடைபெறவுள்ளது.
இந்த கிரிக்கெட் தொடரில் இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன.
இதற்கமைய, குமார சங்கக்கார தலைமையிலான இலங்கை அணியில், உபுல் தரங்க, ரமேஸ் களுவிதாரன, லகிரு திரிமான, ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால், இசுரு உதான தில்ருவான் பெரேரா, சீக்குகே பிரசன்ன, தம்மிக்க பிரசாத்,சதுரங்க டி சில்வா, சிந்தக ஜெயசிங்க, நுவான் பிரதீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அத்தோடு, சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, குர்கீரத் சிங் மான், அம்பத்தி ராயுடு , யுவராஜ் சிங் ,யூசுப் பதான் , ஸ்டூவர்ட் பின்னி , இர்பான் பதான், பவன் நெகி , நாமன் ஓஜ்ஜா , அபிமன்யு மிதுன், ராகுல் சர்மா, வினய் குமார்,தவால் குல்கர்னி, ஷாபாஸ் நதீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய முதல் நாள் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான்களான குமார் சங்ககார மற்றும் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இலங்கை – இந்திய அணிகள் மோதவுள்ளன.
இந்த போட்டி தொடரை இலங்கையில் எமது சகோதர தொலைக்காட்சியான மொனரா தொலைக்காட்சியில் கண்டுகளிக்கலாம்.