போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்கிறது. பணய கைதிகளில் 4 பேர் 2023 அக்டோபர் 7ம் திகதி கடத்தப்பட்டவர்கள் என்றும், எஞ்சிய 2 பேர் 2014, 2015ம் ஆண்டுகளில் காசாவுக்குள் நுழைந்தவர்கள் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எலியா ஷொஹன், ஒமர் ஷெம் டம், ஒமர் வெங்வெர்ட், டெல் ஷஹொம், அவிரா மெங்குஷ்டா , ஹஷிம் அல் சையது ஆகியோரே விடுதலை செய்யப்படவுள்ளனர்.
6 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 602 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.
முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் 33 பேரை ஹமாஸ் விடுவிக்க ஒப்புக்கொண்டிருந்தது. அந்த ஒப்பந்தப்படி, 33 பேரில் உயிருடன் உள்ள எஞ்சிய 6 பேரும் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். இதனை தொடர்ந்து அடுத்தக்கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வருமா?, போர் மீண்டும் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2ம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை இதுவரை தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.