1971 ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பின்னர் முதன் முறையாக பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அதிகாரப்பூர்வ அளவில் நேரடி வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளன.
சர்வதேச ஊடகங்களின் அறிக்கையின்படி, இரு நாட்டு அரசாங்கத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட முதல் பொருட்கள் சேவை கப்பலானது பாகிஸ்தானில் காசிம் துறைமுகத்திலிருந்து பங்களாதேஷ் நோக்கி பயணித்துள்ளது.
பங்களாதேஷ் 50,000 தொன் பாக்கிஸ்தான் அரிசியை பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் (TCP) மூலம் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் பெப்ரவரி தொடக்கத்தில் இறுதி செய்யப்பட்டது.
அரிசி ஏற்றுமதி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும்.
முதல் 25,000 தொன் அரிசி இப்போது பங்களாதேஷுக்கு செல்லும். இரண்டாவது தொகுதி மார்ச் மாத தொடக்கத்தில் புறப்படும்.
இந்த வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் நேரடி கப்பல் வழிகளை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இருதரப்பு வர்த்தக உறவுகளில் ஒரு வரலாற்றுப் படியைக் குறிக்கிறது.
கிழக்கு பாகிஸ்தான் 1971 இல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடாக உருவானது.
1971 ஆம் ஆண்டிலிருந்து உத்தியோகபூர்வ வர்த்தக உறவுகள் மீட்டெடுக்கப்பட்ட முதல் நிகழ்வாக பொருட்களின் போக்குவரத்து குறிக்கப்பட்டது.