துபாயில் அமைந்துள்ள ஏவியேஷன் கழக டென்னிஸ் அரங்கில் சனிக்கிழமை (22) இரவு நடைபெற்ற துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கிளாரா டவுசனை 17 வயதான மிர்ரா ஆண்ட்ரீவா தோற்கடித்து வரலாறு படைத்தார்.
106 நிமிட இறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை டென்மார்க் நட்சத்திரமான கிளாரா டவுசனை 7-6 (7-1) 6-1 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
இது அவரது தொழில் வாழ்க்கையில் வெற்றி கொள்ளும் இரண்டாவது பெரிய பட்டமாகும்.
இந்த வெற்றியுடன் WTA 1000 கிண்ணத்தை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை ஆண்ட்ரீவா பெற்றுள்ளார்.
அவரது இந்த வெற்றியுடன் இளம் வீராங்கனை அடுத்த வாரம் முதல் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முதல் முறையாக முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ரீவா இதற்கு முன்பு 2024 ஆம் ஆண்டின் மத்தியில் லசி ஓபனை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














