முப்படையில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்ய கொந்தா அறிக்கையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் சட்டரீதியாக பணிநீக்கம் செய்யப்படாத அனைத்து முப்டையினரையும் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் அண்மைக்காலமாக துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக இடம்பெற்றுவரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பலர் ஆயுதபயிற்சிபெற்றவர்கள் எனவும் அவர்களில் பலர் சட்டரீதியாக அன்று சேவையில் இருந்து வெளியேறியுள்ளதுடன் பலர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்
இவ்வாறு வெளியேறிய நபர்களை கைது செய்யும் நடவடிக்கை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் இராணுவ வீரர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.