2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனுக்கு முன்னதாக கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி சென்னைக்கு வியாழக்கிழமை (26) சென்றுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் தோனிக்கு ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளார்.
அங்கு அவர் வரவிருக்கும் சீசனுக்கான தயாரிப்பில் பயிற்சி அமர்வுகளை தொடங்குவார்.
மேலும் பல வீரர்களும் முகாமில் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல். 18 ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22 அன்று தொடங்க உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் போட்டியை மார்ச் 23 அன்று சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடுகிறது.
தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்து முறை ஐ.பி.எல். பட்டத்தை வென்றுள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு தோனி தலைவர் பதவியில் இருந்து விலகி, இளம் கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தலைமைப் பொறுப்புகளை ஒப்படைத்தமையும் குறிப்பிடத்தக்கது.