மித்தெனிய முத்தரப்பு கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரை 90 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மித்தெனிய, கல்பொத்தாய பகுதியில் கடந்த 18ஆம் திகதி இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.