ஐக்கிய மக்கள் சக்தி (SJB), ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் இரு கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பு பேச்சுவார்த்தை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த கூட்டம் முதலில் பெப்ரவரி 26 ஆம் திகதி நடைபெறவிருந்த போதிலும், அன்றைய தினம் விடுமுறை நாளாக இருந்ததால் அது ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, எதிர்வரும் சில நாட்களில் கூட்டம் தொடர்பான திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும் அவர்களது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் பேச்சுவார்த்தை தற்காலிகமாக முடங்கியுள்ளது.
எவ்வாறெனினும், எதிர்வரும் தேர்தலில் கூட்டாகப் போட்டியிடுவது இரு கட்சிகளுக்கும் கணிசமான அரசியல் அனுகூலங்களை வழங்க முடியும் என இரு கட்சிகளின் உறுப்பினர்களும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.