அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘டிராகன்’.
இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று தற்போது 7 நாட்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையில் மூன்று நாட்களிலேயே உலகளவில் 50 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த படத்தில் நடித்த கயாடு லோஹரின், பல்லவி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்து வருவதுடன் அவரின் இன்ஸ்டா ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், கயாடு லோஹர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கொஞ்சும் தமிழில் பேசி வெளியிட்ட வீடியோவில், ”எனக்கு எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. எனக்கும், டிராகனுக்கும், பல்லவி கதாபாத்திரத்துக்கும் கிடைக்கும் வரவேற்பு மிகையான ஒன்று. திரையரங்கில் எனக்கு நீங்கள் அடிக்கும் விசிலாகட்டும், இன்ஸ்டாவில் அழகான கமெண்ட்ஸ், எடிட் ஆகட்டும் இதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் தமிழ்ப்பொண்ணு இல்லை. தமிழும் சரியாக பேசவராது. ஆனால், நீங்கள் எனக்கு தரும் அன்பு விலைமதிப்பில்லாதது. இந்த அன்பை எனது படங்களின் மூலம் திருப்பி தருவேன். உங்களைப் பெருமைப்பட வைப்பேன்” எனப் பேசியுள்ளார்.