பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் இருந்து பயணித்த விமானம் வெர்மான்ட் என்ற இடத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியது .
குறித்த சிறிய ரக விமானம் ( ஆம்புலன்ஸ் ) அங்குள்ள ஈக்வினாக்ஸ் எனும் பனிமலையில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளானத்தில் விமானி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர் .
விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு படையினர் விமானத்தில் படுகாயம் அடைந்திருந்த மூவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.