தற்போதைய அரசாங்கம் வரிக்கு மேல் வரி விதிக்கும் தரப்பாக நடந்து வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் வெற் வரி மட்டுமின்றி இன்னும் பல நேரடி மற்றும் மறைமுக வரிகளை மக்கள்மீது சுமத்தி, மக்களை பெரும் நெருக்கடிக்குள் ஆழ்த்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சேவை ஏற்றுமதி துறைக்கு 15 சதவீதம் புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.நமது நாட்டில் டொலர் பற்றாக்குறைக்குத் தீர்வு ஏற்றுமதி ஊக்குவிப்பாகும். ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்குப் பதிலாக வரி விதிப்பது நியாயமற்றது.
நாட்டின் பொருளாதார நிலை, நாட்டின் டொலர் பற்றாக்குறை மற்றும் அன்னிய செலவானி கையிருப்பு தொடர்பில் போதிய விளக்கம் இல்லாததால் இவ்வாறு நியாயமற்ற வரி விதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய வரி விதிப்பினூடாக, பண மோசடி நடப்பதோடு நாட்டிற்குப் பாதகமே விளையும்.நாட்டு மக்களை ஏமாற்றமடையச் செய்து, இளைஞர்களின் அபிலாஷைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையையே இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.