நாட்டில் எரிபொருள் இருப்புக்கு பற்றாக்குறை இல்லை என்று தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1) நாடாளுமன்றத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் செயற்கையான எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்க முயற்சிப்பதாக அனில் ஜெயந்த இங்கு சுட்டிக்காட்டினார்.