இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவனை தாக்கி காதில் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான பாடசாலை அதிபர் எதிர்வரும் மார்ச் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹிங்குராங்கொட பதில் நீதவான் நாலக மிஹிர பண்டார இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், மாணவர் தொடர்பான நீதிமன்ற மருத்துவ அதிகாரியின் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மெதிரிகிரிய பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மெதிரிகிரிய பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.