2025 ஆம் ஆண்டின் சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கார் விருதினை கீரன் கல்கின் (Kieran Culkin) தட்டிச் சென்றுள்ளார்.
2025 ஆம் ஆண்டிற்கான 97வது ஒஸ்கர் விருது விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் ‘ A Real Pain‘ என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கார் விருதினை கீரன் கல்கின் தட்டிச் சென்றுள்ளார்.
ஜெஸ்ஸி ஐசன்பெர்க் (Jesse Eisenberg) என்பவரின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.