குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இன்று பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அதன்படி இன்று காலை 6 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் காயமடைந்தவர்களை மக்கள் எரத்னா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும் அவர்களில் இருவர் இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.