2025 ஆம் ஆண்டிற்கான 97 ஆவது ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதினை The Brutalist என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக Adrien Brody வென்றுள்ளார்.
திரைத்துறையின் உச்சபட்ச விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருது வழங்கும் விழாவானது இன்று லாஸ் எஞ்சலஸில் கோலகலமாக நடைபெற்றது.
அந்தவகையில் Brady Corbet என்பவரின் இயக்கத்தில் உருவான The Brutalist என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதினை Adrien Brody வென்றுள்ளார்.
முன்னதாக ரோமன் பொலான்ஸ்கி இயக்கிய தி பியானிஸ்ட் என்ற படத்திற்காக தனது 29 வயதில் அவர் ஒஸ்கார் விருதினை வென்றிருந்தார். இவ்விருதை வென்றதின் மூலமாக, ஒஸ்கர் விருது வென்ற இளம் நடிகர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.
இந்நிலையில் தனது 51 ஆவது வயதில் மீண்டும் இரண்டாவது முறையாக ஒஸ்கார் விருதினை Adrien Brody வென்றுள்ளார். இதன்போது தான் விருது பெறக் காரணமாக இருந்த தனது படக்குழுவினர் மற்றும் குடும்பத்தினருக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.