உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் இருவருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றைய தினம் இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு உக்ரைன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் குறித்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த ஐரோப்பியத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னரே உக்ரைன் ஜனாதிபதி இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்துள்ளார்.
இதேவேளை, இரு தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் மிகச் சிறந்த மட்டத்தில் இருந்ததாக வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் .