எழுவை தீவு மற்றும் அனலைதீவு இடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோகிராம் மற்றும் 400 கிராம் கஞ்சா வினை இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் பொழுது கிடைக்கபெற்ற தகவலுக்கமைவாக எழுவை தீவு அனலை தீவு கடற்பரப்பில் பயணித்த படகொன்றினை சோதனையிட்ட பொழுது 190 கிலோகிராம் 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டுள்ளது
இதன்படி காரைநகர் மற்றும் மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த இருவரையும் சான்று பொருட்களையும் ஊர்காவற்துறை பொலிசாரின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது