பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) உக்ரேனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரவும் ரஷ்யாவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார்.
அத்துடன், ஐரோப்பிய தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை (02) உக்ரேன் அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் முன்வைக்க ஒப்புக்கொண்டதாகவும் கெய்ர் ஸ்டார்மர் கூறினார்.
இது ரஷ்யாவைத் தடுப்பதற்கு அவசியமானது என்று கெய்வ் கூறும் பாதுகாப்பு உத்தரவாதங்களை வொஷிங்டன் வழங்குவதற்கான ஒரு முக்கிய படியாகும்.
லண்டனில் நடந்த உச்சிமாநாட்டில், ஐரோப்பிய தலைவர்கள் உக்ரேனிய ஜனாதிபதிக்கு வலுவான ஆதரவை வழங்கினர் மற்றும் அவரது தேசத்திற்கு மேலும் உதவுவதாக உறுதியளித்தனர்.
வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் மோதலில் ஈடுபட்டு, வொஷிங்டனுக்கான விஜயத்தை குறைத்துக்கொண்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த சந்திப்பு வந்தது.
உண்மையான அமைதி மற்றும் உத்தரவாதமான பாதுகாப்பிற்காக அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான அடிப்படையை கண்டுபிடிப்பதற்காக நாங்கள் அனைவரும் ஐரோப்பாவில் ஒன்றாக வேலை செய்கிறோம் என்று உச்சிமாநாட்டிற்குப் பின்னர் ஜெலென்ஸ்கி கூறினார்.
தலைவர்களின் கூட்டத்திற்குப் பின்னர் ஒரு செய்தி மாநாட்டில் பேசிய ஸ்டார்மர், உக்ரேனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வரவும் ரஷ்யாவிடம் இருந்து நாட்டை பாதுகாக்கவும் நான்கு அம்ச திட்டம் ஒப்புக் கொள்ளப்பட்தாகக் கூறினார்.
உக்ரேனுக்குள் இராணுவ உதவிகள் வருவதைத் தடுக்கவும், ரஷ்யாவின் மீதான பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கவும்
எந்தவொரு நீடித்த அமைதியும் உக்ரேனின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், உக்ரேன் எந்த அமைதிப் பேச்சுக்களிலும் கலந்து கொள்ள வேண்டும்
சமாதான உடன்படிக்கை ஏற்பட்டால், உக்ரேனின் தற்காப்பு திறன்களை உயர்த்தி எதிர்கால படையெடுப்பைத் தடுக்கும்
உக்ரேனில் ஒரு ஒப்பந்தத்தைப் பாதுகாக்கவும் அதன் பிறகு அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கவும் “விருப்பமுள்ளவர்களின் கூட்டணியை” உருவாக்குதல்
எந்தெந்த நாடுகள் இந்த கூட்டணியில் சேர ஒப்புக்கொண்டன என்பதை பிரித்தானிய பிரதமர் குறிப்பிடவில்லை, ஆனால் உறுதியளித்தவர்கள் உண்மையான அவசரத்துடன் திட்டமிடலை தீவிரப்படுத்துவார்கள் என்று கூறினார்.