நாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டில் எரிபொருள் வரிசையினை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது ” நாட்டில் இன்று எரிபொருள் விநியோக செயற்பாடு முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும், எரிபொருள் விநியோகஸ்தர்கள் அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தில் பெட்ரோலியக் கூட்டுத்தானம் தலையிட்டுள்ளமையினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது எனவும், நாட்டில் தற்போது எரிபொருள் வரிசை காணப்படுகிறது எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை என்ன எனக் கேள்வி எழுப்பிய சஜித் பிரேமதாச, அரசாங்கம் எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் உடனடியாக கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரவேண்டும் எனவும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 159 பேர் நாடாளுமன்றம் செல்வதற்கு ஆணை வழங்கிய மக்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.