2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
01. கொலன்னாவ வெள்ளப்பெருக்கு நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்புக் குழுவொன்றை நியமித்தல்
2024 ஜுன் மாதத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய விடயங்களை ஆராய்வதற்கும், அப்பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான மூலகாரணிகளைக் கண்டறிந்து, அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்படாதிருப்பதைத் தடுப்பதற்குத் தேவையான விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்கும், கொலன்னாவ நகர மீள்கட்டமைப்புக்கான விரிவான அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், கொழும்பு மாவட்டச் செயலாளரின் தலைமையிலான குழுவொன்று 2024.06.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, குறித்த குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் விதந்துரைகளை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்புக்காக கௌரவ பிரதமர் அவர்களின் தலைமையிலும், குறித்த விடயதான அமைச்சரின் பங்கேற்புடன், ஏற்புடைய ஏனைய அதிகாரிகளின் பங்குபற்றலுடன் கூடிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
02. சர்வதேச நீர் மாநாடு (IWC) மற்றும் 9 ஆவது ஆராய்ச்சி மாநாடு மற்றும் உலக நீர் தினக் கொண்டாட்டம்
நீர் மாசடைதல் மற்றும் மனித சுகாதார சேவைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 2015 ஆம் ஆண்டில் முதலாவது ஆராய்ச்சி மாநாட்டை நடாத்தியுள்ளது. பின்னர், குறித்த மாநாடு 2022 ஆம் ஆண்டு வரை உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் நபர்களை உள்வாங்கி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால், நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக்கான சிறப்பு மையம் (CEWAS) தாபிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச நீர் மாநாடு – 2022 இல் 7 ஆவது ஆராய்ச்சி மாநாடு உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்களின் பங்குபற்றலுடன் நடாத்தப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சர்வதேச நீர் மாநாடு மற்றும் 08வது ஆராய்ச்சி மாநாட்டில் 09 நாடுகள் பங்குபற்றியிருந்தன. ‘புத்தாக்க ஆராய்ச்சி டிஜிட்டல்மயப்படுத்தல் மற்றும் கழிவுநீர் முகாமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் சர்வதேச நீர் மாநாடு – 2025 இல் 09 ஆவது ஆராய்ச்சி மாநாட்டை 2025 மார்ச் மாதம் 19 ஆம் 20 ஆம் திகதிகளில் நீர் மற்றும் துப்பரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் (CEWAS) நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச நீர் மாநாட்டுக்கு இணையாக மார்ச் மாதம் 22 ஆம் திகதியன்று உலக நீர் தினத்தையொட்டி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் 50 ஆவது ஆண்டுநிறைவைக் கொண்டாடுமுகமாக மார்ச் மாதம் 21 ஆம் திகதி நிகழ்ச்சித்திட்டமொன்றும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மாநாட்டில் கிட்டத்தட்ட 100 சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆய்வுகளை வெளியிடுவதற்கும், அதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 600 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றுவார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்தும் கருத்திட்டம்
Bloomberg Philanthropies மற்றும் அவுஸ்திரேலியா அரசின் நிதியுதவியுடன் சுகாதாரத்திற்கான தரவுகள் (D4H) தொடக்க முயற்சி வேலைத்திட்டத்தின் மூலம் முக்கியமான பொதுச் சுகாதார தகவல்களைத் திரட்டுதல் மற்றும் பயன்பாட்டைப் பலப்படுத்துவதற்காக குறைந்த மற்றும் நடுத்தர வருமானங் கொண்ட 20 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தொழிநுட்ப ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றன. குறித்த வேலைத்திட்டத்துடன் ஒத்துழைப்புடன் இயங்கி வருகின்ற ஏவையட ளுவசயவநபநைள நிறுவனம், இலங்கையில் சுகாதாரத்திற்கான தரவுகள் தொடக்க முயற்சியில் முன்னணி தொழிநுட்பப் பங்காளராக இயங்கி வருவதுடன், தற்போது 03 வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடுத்த நிகழ்ச்சித்திட்டமாக, இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்ட புற்றுநோய் ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தின் மூலம் புற்றுநோய் தொடர்பான அவதானிப்புக்களைப் பலப்படுத்துவதற்காக தொழிநுட்ப ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஏவையட ளுவசயவநபநைள நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கீழ், குறித்த நிறுவனத்தின் இலங்கையின் நிதி முகவரான இலங்கை சுகாதார தகவல் சங்கத்தின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ள செயற்பாடுகளுக்கு 19.50 மில்லியன் ரூபாய்கள் நிதியை செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஏவையட ளுவசயவநபநைள நிறுவனமும், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) தாங்கிகளை அபிவிருத்தி செய்தல்
இலங்கை அரசு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை இந்திய எண்ணெய் கம்பனி மற்றும் திருகோணமலை பெற்றோலிய முனைய கம்பனி ஆகியன சீனன்குடா துறைமுகத்தின் எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள பிரதேசத்தின் உரித்து, அபிவிருத்தி மற்றும் பயன்பாடுக்கான ஒப்பந்தத்தில் 2022.01.06 அன்று கையொப்பமிடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கமைய திருகோணமலையின் மேற்புறத்தில் அமைந்துள்ள எண்ணெய்த் தாங்கிகளில் இருபத்துநான்கு (24) ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகின்ற தினத்திலிருந்து 50 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் கிடைத்துள்ளது. குறித்த எண்ணெய்த் தாங்கிகளை 03 ஆண்டுகளில் அபிவிருத்தி செய்து பூர்த்தி செய்யும் நோக்கில் மூன்றாண்டுக் கருத்திட்டமான்றைத் திட்டமிட்டு சாத்தியவளக் கற்கை உள்ளடங்கலாக ஆரம்பக் கருத்திட்ட நடவடிக்கைகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை புகையிரதத் திணைக்களம், சமுத்திரச் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட ஏற்புடைய தரப்பினர்களின் அனுமதிகளும் தற்போது பெறப்பட்டுள்ளன. அதற்கமைய, திறைசேரிக்கு செலவுச்சுமை ஏற்படாத வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதியைப் பயன்படுத்தி உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. சியம்பலாண்டுவ 100 மெகாவாற்று சூரிய மின்சக்திக் கருத்திட்டத்திற்குத் தேவையான காணியை இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபைக்கு நன்கொடையாக வழங்குதல்
2030 ஆம் ஆண்டாகும் போது நாட்டின் மின்சக்தித் தேவையின் 70மூ சதவீதமான மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல்வளங்கள் மூலம் பூர்த்திசெய்து கொள்வதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது. இக்கொள்கைக்கமைய, சியம்பலாண்டுவ 100 மெகாவாற்று சூரிய மின்சக்திப் பூங்கா வசதியானது ஒரு முக்கிய கருத்திட்டமாக அடையாளங் காணப்பட்டுள்ளது. இக்கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக விவசாய நடவடிக்கைகள் அல்லது வேறெந்த பயிர்ச்செய்கைகள் செய்யப்படாத 219.7233 ஹெக்ரெயார் நிலப்பரப்புக்கள் அடையாளங் காணப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, துரிதமாக ஆரம்பிப்பதற்க இயலுமாகும் வகையில் 219.7233 ஹெக்ரெயார் காணியை அளிப்பாக இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகாரசபைக்கு வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. சுகாதார முறைமையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்திற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் தொகையின் அளிப்புக் காலவரையறையை நீடித்தல்
மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் ஆரம்ப சுகாதார சேவை முறைமையின் வினைத்திறன், சமத்துவம் மற்றும் பதிலளிப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் மூலம் சுகாதார முறைமையை மேம்படுத்துவதற்கான கருத்திட்டமானது இரண்டு 02 கட்டங்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக ஆரம்ப நிதியிடல் 37.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையாகவும் மற்றும் 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அளிப்பாகவும் வழங்கப்படுகின்றது. மேலும், குறித்த கருத்திட்டத்தின் மேலதிக நிதியிடலாக 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகையாகவும் மற்றும் 03 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அளிப்பாகவும் பெறப்பட்டுள்ளது. கருத்திட்டத்திற்காக ஆரம்ப நிதியிடல் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள கடன் தொகை மற்றும் நன்கொடையை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு, அதன் செல்லுபடியாகும் காலப்பகுதியை ஒரு வருடத்தால் நீடிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சுகாதார முறைமையை மேம்படுத்தும் கருத்திட்டத்தின் ஆரம்பக் கடன் தொகை மற்றும் அளிப்புத்தொகையின் செல்லுபடியாகும் காலவரையறையை 2025.11.30 வரைக்கும், கடன்தொகையின் கணக்குகளை ஈடுசெய்வதற்கான இறுதித் தினமாக 2026.05.31 வரைக்கும் நீடிப்பதற்காக சுகாதாரத்துறை மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்;ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. அரச சட்ட வரைவாக்க வேலைத்திட்டம்
2025 ஆம் ஆண்டில் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சு புதிதாக அறிமுகப்படுத்துவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள சட்டங்கள் மற்றும் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற, தற்போது வலுவிலுள்ள சட்டங்கள் அரச சட்ட வரைவாக்க வேலைத்திட்டம் – 2025 இல் உட்சேர்த்துக் கொள்வதற்காக நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற புதிய சட்டங்கள்
• தேசிய சமுதாய குடிநீர் அபிவிருத்திச் சட்டம்
• இலங்கை ஆதன விற்பனை தொழில் வல்லுநர்களின் நிறுவனச் சட்டம்
• சீனா – இலங்கை கூட்டு ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்க மையத்தை (துசுனுஊ) சட்டபூர்வமாக்குவதற்கான சட்டம்
• 2018 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க, இருப்பிடக்கூறு சொத்தாண்மை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் ஏற்பாடுகள் உள்ளடக்கி கூட்டாட்சி ஆதனங்களுக்கான வசதியளிப்புக்களுக்கான புதிய சட்டம்
திருத்தங்கள் அறிமுகப்படுத்த வேண்டிய தற்போதைய சட்டங்கள்
• 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டம்
• 1974 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைச் சட்டம்
• 1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, நகர மற்றும் கிராமிய நிர்மாணங்கள் கட்டளைச் சட்டம்
• 1979 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, தேசிய வீடமைப்பு அதிகாரசபைச் சட்டம்
• 2008 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க, நகரக் குடியமர்த்தல் அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம்
• 1978 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க, நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டம்
• 2021 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபன (திருத்தச்) சட்டம்
• 1973 ஆம் ஆண்டின 11 ஆம் இலக்க, இருப்பிடக்கூறு சொத்தாண்மைச் சட்டம்.
• 1973 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க, பொது வசதிகள் சபைச் சட்டம்.
08. கலாச்சார வெளியீடுகளின் பல்வகைத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான யுனெஸ்கோ (2005) சமவாயத்தை இலங்கையில் ஏற்று அங்கீகரித்தல்
யுனெஸ்கோ அமைப்பு தனது உறுப்பு நாடுகளில் உருவாக்கப்படுகின்ற கலாச்சார வெளியீடுகளின் பல்வகைத்தன்மையைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சமவாயம் 2005.10.20 அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த சமவாயம் 2007.03.10 ஆம் திகதி தொடக்கம் வலுவிலுள்ளது. குறித்த சமவாயம் தற்போது 156 உறுப்பு நாடுகளில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குறித்த சமவாயத்தை இலங்கையில் ஏற்று அங்கீகரிப்பதற்காக 2024.09.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், இதுவரை சமவாயம் ஏற்று அங்கீகரிக்கப்படவில்லை. அதற்கமைய, கலாச்சார வெளியீடுகளின் பல்வகைத்தன்மையை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான யுனெஸ்கோ (2005) சமவாயத்தை இலங்கை ஏற்று அங்கீகரிப்பதற்காக கொள்கை ரீதியான அங்கீகாரத்தை எதிர்பார்த்து புத்தசாசன, சமய, கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்
தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் திரு. எச்.எம்.யூ.ஹேரத் அவர்களின் ஒப்பந்த சேவைக்காலம் 2025.03.07 ஆம் திகதியுடன் நிறைவு பெறவுள்ளது. அதற்கமைய, அன்று தொடக்கம் வெற்றிடமாகவுள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயக பதவி வெற்றிடத்திற்கு ஓய்வுநிலை மேஜர் ஜெனரல் திரு. சம்பத் கொட்டுவேகொட அவர்களை ஒப்பந்த சேவை அடிப்படையில் ஒரு வருட காலத்திற்கு (01) நியமிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தை அரசின் தேசிய கொள்கைப் பணிச்சட்டகமாக ஏற்றுக்கொள்ளல்
பலம்பொருந்திய உற்பத்திப் பொருளாதாரத்தின் மூலம் 2030 ஆம் ஆண்டாகும் போது 120 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மொத்தத் தேசிய உற்பத்தி இலக்குடன் கூடியதாக நிலைதளராத பொருளாதார விருத்தி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது பொருளாதார, சமூக, சுற்றாடல் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில் கீழ்க்குறிப்பிட்ட பிரதான 04 துறைகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது.
• எளிமையான வாழ்க்கை – ஆரோக்கியமான நாடு
• கண்ணியமான வாழ்க்கை – பாதுகாப்பான நாடு
• நவீனமான வாழ்க்கை – வளமான நாடு
• நன்மதிப்பான வாழ்க்கை – நிலைதளராத நாடு
குறித்த 04 துறைகளின் கீழ் 40 உப துறைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன. அந்தந்தத் துறைகளுக்குரிய கொள்கைக் கோட்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வேறு வேறாக அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தை அரசின் தேசிய கொள்கைப் பணிச்சட்டகமாக ஏற்றுக் கொள்வதற்கும், அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்கள் அவர்கள் தத்தமது பணிகளுக்கமைய திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.