இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்திய புதிய விலை நிர்ணய சூத்திரத்திற்கு எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெயதிஸ்ஸ, இந்த சூத்திரம் இப்போது அமலில் உள்ளதை உறுதிப்படுத்தினார்.
விநியோகஸ்தர்கள் சமர்ப்பித்த திட்டங்களை மறுஆய்வு செய்ய மார்ச் 18 ஆம் திகதி மற்றொரு கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, எரிபொருள் விநியோகம் தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் கூறினார்.