அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் விமானத்தில் ஏறிய 17 வயது சிறுவன் மீது பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
வியாழக்கிழமை மெல்போர்ன் அருகே உள்ள விமான நிலையத்திற்குள் பதுங்கிச் சென்று விமானத்தில் ஏற முயன்ற குறித்த சிறுவனை, துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் பயணிகள் மடக்கிப் பிடித்தனர்.
அவலோன் விமான நிலையத்தில் பாதுகாப்பு வேலியில் இருந்த ஒரு துளை வழியாக அந்த சிறுவன் விமான நிலையத்தின் ஓடுபாதை பகுதிக்குள் நுழைந்துள்ளார்.
பின்னர், அவர் சுமார் 160 பயணிகளுடன் சிட்டினிக்கு புறப்படத் தயாராகவிருந்த JQ 610 ஜெட்ஸ்டார் விமானத்திற்குள் ஏற முற்பட்ட போது மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக விக்டோரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவலோன் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.
அந் நாட்டு நேரப்படி வியாழன் பிற்பகல் 2.20 மணியளவில் விக்டோரியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையத்தில் உள்ள வேலியில் உள்ள ஒரு துளை வழியாக அவர் புகுந்து, பின்னர் விமானத்தை நோக்கி நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.