அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இராணமடு 11 ம் கிராமத்தில் வசிக்கும் வீராங்கனைகள் தொடர்பான பார்வையயே இது
அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இராணமடு 11 ம் கிராமத்தில் வசிக்கும் வீராங்கனைகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கபடி, எல்லே,கிரிக்கெட் போன்ற 03 விளையாட்டுகளில்பிரதேச , மாவட்ட ,மாகாண குழு விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர்.
பெண்களால் முடியாதது எதுவும் இல்லை, பெண்களே நாட்டின் கண்கள் ,மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்யதிட வேண்டும் அம்மா என்ற ஆன்றோர் வாக்கிற்கு அமைய , பல்வேறு போராட்டங்கள் , அவமானங்கள், அனைத்தையும் கடந்து தான் முன்னோக்கி செல்லாம் என திடசங்கற்பூண்டு தமது விளையாட்டுக்கு தேவையான இடங்களை தாமே துப்பரவு செய்து ,பல வெற்றி வாகைகளை சூடும் இந்த மகளிரின் கருத்துக்களும், கவலைகளும் இந்த மகளிர் தினத்தை வெளிக்கொணர பட வேண்டியது அவசியமல்லவா ?
வெக்கம் அச்சம் மடம் நாணம் போன்ற அனைத்தையும் புறந்தள்ளி, நாட்டினுடைய ஜனாதிபதியாக ஒரு பெண் திகழலாம் என்றால் , இலங்கையின் அரச பதவிகளிலும் பெண்களால் முன்னோக்கி வரலாம் என்றால் ஏன் எம்மால் முன்னோக்கி வர முடியாது என்ற தூர நோக்கான சிந்தனையை மனதில் கொண்டு பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தமது அதி உயர்ந்த திறமையை வெளிக் கொண்டு வர தமது பெற்றோர்களும் தமது பயிற்றுவிப்பாளரும் தமது கிராமமுமே தமக்கு உதவுதாக இந்த வீராங்கனைகள் கூறுகின்றனர்.
தமது பிரதான விளையாட்டாக கபடி விளையாட்டு அமைந்திருந்தாலும் அதற்கு அப்பால் கிரிக்கெட் எல்லே போன்ற விளையாட்டுகளிலும் தாமே நாவிதன்வெளி பிரதேசத்தின் புகழை ஒரு பெண் அணியாக தாமே மாகாண ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் இந்த வெற்றியை உலகிற்கு பறைசாற்றி இருப்பதாகவும், இந்த வீராங்கனைகள் குறிப்பிடுகின்றனர்.
பெண்கள் முடங்கி இருக்கும் இந்த காலகட்டத்தில் முடங்கி இருக்கும் அனைத்து பெண்களும் தமக்கான தொழில் வாய்ப்பையோ , சமூகத்தில் தான் முன்னோக்கி திகழவோ , நாம் நாமாக முயற்சி செய்தால் மாத்திரமே முடியும் எனவும், இந்து வீராங்கனைகள் குறிப்பிடுகின்றனர்.எனவே இந்த வீராங்கனைகளின் கோரிக்கையையாக அமைவது எந்தப் பெண் தன்னை அர்ப்பணித்து முயற்சி செய்கின்றாளோ அவளே இந்த உலகின் வீர பெண்மணியாக கருதுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டிலும், மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இது, மகளிரின் சமூகத்தில் எளிதாக அடைந்த முன்னேற்றங்களை பாராட்டி, அவர்களின் சவால்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நாள். மகளிரின் சிறப்பையும், அவர்களின் மனித உரிமைகளையும், சமத்துவத்தையும் கவனத்திற்கு கொண்டு வருவதாகும் இந்த தினம், உலகளவில் அதிகமான முக்கியத்துவம் பெறுகின்றது.
மகளிர் என்பது சமுதாயத்தின் மிகவும் முக்கியமான உறுப்பினராக இருக்கின்றனர். அவர்களது பங்கு குடும்பம், சமூகத்துடன் மட்டுமல்லாமல், நாடு மற்றும் உலக அளவிலும் மிகவும் முக்கியமானது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குழந்தைகளை வளர்க்க, சமூகத்திற்கு சேவை செய்ய, தொழில்நுட்பம், கல்வி, அரசியல், கலை, விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சாதனைகளை படைத்துள்ளனர்.
இது மட்டுமின்றி, மகளிர் தினம், அவர்களுக்கு சமத்துவம், சுதந்திரம் மற்றும் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதன் அவசியத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் ஒரு நாள். ஒவ்வொரு மகளிரும், உலகில் நிறைய சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் அவற்றை தைரியமாக சமாளித்து சாதனைகளை அடைகின்றனர்.
வீராங்கனைகளின் பெயர்
ஜே. கியோனா
கே.தினுஷ்கா
பி. ரூஜானி
கே.சனோஜிகா
எஸ். ஷஸ்னிக்கா
டி. ஹெமிருக்ஷா
எஸ். நிதா.
ஜே. திவானி
ஆர். நியுக்ஷனா
எஸ்.தியுக்ஷனா
ஜே. நிதர்ஷனா
ஏ. நிலுக்ஷிகா
டி.சதுர்ஷிகா
டி.தாட்ஷியா